நெருங்கிய வட்டத்தினரால் ரஷ்ய அதிபர் புடின் கொல்லப்படுவார்: ஜெலென்ஸ்கி சொல்கிறார்

கீவ்: ரஷ்ய அதிபர் புடின் அவரது நெருங்கிய வட்டத்தினரால் கொல்லப்படுவார் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்து உள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் ஒரு ஆண்டு கடந்தும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த போர் குறித்து தனியாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய அதிபர் புடினின் உள்வட்டத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள் அதிபர் புடின் அவரது நெருங்கிய வட்டத்தால் கொல்லப்படுவார். ஏனெனில் ரஷ்ய அதிபர் பதவியில் புடின் இருக்கும் போது அவருக்கு ஒரு பலவீனமான காலம் வரும். புடின் ஆட்சியின் பலவீனம் ரஷ்யாவிற்குள் உணரப்படும் ஒரு தருணம் நிச்சயம் வரும். பின்னர் வேட்டையாடுபவர்கள்  ஒரு கொலையாளியைக் கொல்ல ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள். அவர்கள் கோமரோவ், ஜெலென்ஸ்கியின் வார்த்தைகளை நினைவு கூர்வார்கள். அதன்படி கொலையாளியைக் கொல்ல ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள். நிச்சயம் இது நடக்கும். ஆனால் எப்பொழுது என்பது எனக்குத் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: