தெலங்கானாவில் தீப்பிடித்து எரிந்த ஆந்திர சொகுசு பேருந்துகள்

திருமலை : தெலங்கானாவில் ஆந்திர சொகுசு பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன.தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம், விஜயவாடா நோக்கி நேற்று காலை விஜயவாடா பணிமனைக்கு  சொந்தமான 2 சொகுசு பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. அப்போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனை கவனித்த டிரைவர் தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள சிவ்வென்லா அடுத்த குருதுலா கிராமம் அருகே ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தினர். பேட்டரி கோளாறு காரணமாக பஸ் விளக்குகள் எரிந்து  அனைந்து கொண்டடிருந்தன. இதனால், சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளை அனைவரையும் கீழே இறங்க சொல்லி அவ்வழியாக விஜயவாடா சென்று கொண்டிருந்த  போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தில் விஜயவாடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர்.

அதற்குள் சூர்யாபேட்டை பணிமனையில் இருந்து வேறு பேருந்து கொண்டு வரப்பட்டு அதிலிருந்த பேட்டரியை வைத்து பழுதான பேருந்துக்கான பேட்டரியுடன் இணைத்து பழுது பார்த்து கொண்டு இருந்தபோது பழுது பார்க்க வந்த பேருந்தின் பேட்டரில் சத்தத்துடன் எரிய தொடங்கியது. சில நிமிடங்களிலேயே 2 பேருந்திற்கும் தீ பிடித்து கொண்டது.   பயணிகள் வேறு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.   

இதுகுறித்து தகவல் கிடைத்த சிவ்வென்லா தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள்  2 பேருந்துகளும் தீயில் கருகிறது. பேருந்தில் பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இதனால், ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: