மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை 10ம் வகுப்பு அறிவியல் பாடம் செய்முறை தேர்வு: முதன்மை கல்வி அலுவலர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதவாது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2023ம் ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான அறிவியல் பாடம் செய்முறை தேர்வுகள் மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை அறிவியல் பாடம் செய்முறை பயிற்சி வகுப்புகள் பள்ளியிலேயே நடைபெற உள்ளது. எனவே, 10ம் வகுப்பு அறிவியல் பாடம் செய்முறை தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாடம் செய்முறை தேர்வு எழுதி, அத்தேர்வில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதலாம்.

மேலும், அறிவியல் பாடம் செய்முறை தேர்வு குறித்து, செய்முறை பயிற்சி பெற்ற பள்ளியில் இருந்து தங்கள் முகவரிக்கு அறிவிப்பு எதுவும் கிடைக்கப் பெறாதவர்கள், இதனையே அறிவிப்பாக கருதி செய்முறை பயிற்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு அறிவியல் பாடம் செய்முறை தேர்வில் கலந்து கொள்ளலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: