ஆத்தூர் அருகே மினிலாரி கவிழ்ந்து விபத்தால் சேலம்-சென்னை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆத்தூர்: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் சேர்ந்தவர் வசந்தகுமார். இவருக்கு சொந்தமான மினி லாரியில் கும்பகோணத்திற்கு செல்வதற்காக இன்று அதிகாலை புறப்பட்டார். ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பகுதியில் சென்றபோது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க மினிலாரியை திருப்பினார். அப்போது நிலை தடுமாறி மேம்பால தடுப்பு சுவரில் மோதி சாலையில் மினிலாரி கவிழ்ந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக வசந்தகுமார் உயிர் தப்பினார். அதிகாலையில் நடந்த இந்த விபத்தினால் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் சாலையில் கவிழ்ந்த மினி லாரியை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.

Related Stories: