அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி போட்டி

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அதே போல், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடுவதாக இரண்டு முறை தெற்கு கரோலினா ஆளுநராக இருந்தவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

இது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட 37 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரான விவேக் ராமசாமியும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட இருப்பதாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அறிவித்திருப்பது, அமெரிக்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. குடியரசு கட்சி அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் போட்டியினால் அங்கு தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

Related Stories: