மார்க்ஸ் குறித்து சர்ச்சை கருத்து ஆளுநர் மாளிகை முன் 28ல் கருப்புக்கொடி போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

சென்னை: சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து, மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து, இப்போது மார்க்சையும், டார்வினையும் கடிக்க ஆரம்பித்திருக்கிறார். மனித குல வரலாற்றில் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல், ஒடுக்குமுறை கொடுமைகளிலிருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டு சுரண்டலற்ற பொதுவுடமை சமூகத்தை அமைக்க வழிவகுக்கும் மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார்.

மார்க்சியம் இந்தியாவை சிதைத்து விட்டது என்று பேசுகிறார். ஆர்.என்.ரவி அதிகாரத்தை பயன்படுத்தி, அடாவடித் தனமான பேச்சை கண்டித்தும், மார்க்சியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கமாக வரும் பிப்ரவரி 28ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளும், ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

Related Stories: