குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தில் இழப்பீடு வழங்க அஜந்தா குழுமத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு

காந்திநகர்: குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தில் இழப்பீடு வழங்க அஜந்தா குழுமத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலியானோர் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே இருந்த 141 ஆண்டு பழமையான தொங்கு பாலம் டந்த நவம்பரில் அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் பலியாகினர். தனியார் மேற்கொண்ட பராமரிப்பு பணிக்கு பின்னர் பாலம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக வந்து வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வந்தது.  

இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சமும், காயமடைந்த 56 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்க அஜந்தா குழுமம் முன்வந்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்க அஜந்தா குழுமத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: