ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் விதிகளை மீறி பரப்புரையில் ஈடுப்பட்டதாக நாதக வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது விதிமுறைகளை மீறியதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி உரிய அனுமதி பெறாமல் ஆலமரத்தெருவில் பரப்புரை மேற்கொண்டதாக நாதக வேட்பாளர் மேனகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி பிரதான கட்சிகள் உட்பட 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி ஆலமரத்தெருவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உட்பட 30 பேருக்கும் மேற்பட்டோர் பரப்புரை மேற்கொண்டனர். இது தொடர்பாக தேர்தல் விதிகளை மீறி பரப்புரை நடத்தியதாக நாதக வேட்பாளர் மேனகா மற்றும் 30 பேர் மீது பறக்கும் படையினர் காவல்துறையினர் புகார் அளித்தனர்.  

இந்த புகாரையடுத்து தெற்கு காவல்துறையினர் நாதக வேட்பாளர் மேனகா மற்றும் 30 பேர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை எந்த வேட்பாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில் முதன்முறையாக நாதக வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: