பெரியபாளையம்: சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர், 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி ஆற்றைச் சுற்றி, மங்கலம், புதுப்பாளையம், காரணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமக்கள் உள்ளன. ஆரணி ஆற்றின் நீர்மட்டத்தை நம்பி விவசாயிகள் காய்கனிகள், நெற்பயிர்கள் போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆரணி ஆற்றில் இரவு நேரங்களில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் சட்டவிரோதமாக ஒரு கும்பல் மணல் கடத்தி எருக்குவாய் காட்டுப் பகுதியை நோக்கி செல்வதாக ஆரணி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
