சென்னை போட்டிக்கு அழைத்து வரப்பட்ட வீராங்கனையிடம் பாலியல் சீண்டல் போதை ஜூடோ பயிற்சியாளர் கைது

விஜயவாடா: விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட வீராங்கனையிடம் பாலியல் சீண்டல் செய்த ேபாதை ஜூடோ பயிற்சியாளரை போலீசார் போக்சோவில் கைது ெசய்து விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த நுன்னா நகரத்தை சேர்ந்த ஜூடோ விளையாட்டு பயிற்சியாளர்  சாமுவேல் ராஜ் என்பவர், கண்டிகாவில் உள்ள தனியார் ஜூடோ அகாடமியில் மைனர் ஜூடோ வீராங்கனையின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு தவறாக நடந்து கொண்டார். அதிர்ச்சியடைந்த மாணவி, விஜயவாடாவில் உள்ள உறவினர்களுக்கு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தொலைபேசியில் தெரிவித்தார்.

அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, சாமுவேல் ராஜ் மீது புகார் அளித்தனர். அதையடுத்து சாமுவேல் ராஜை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து நுன்னா ரூரல் போலீசார் கூறுகையில், ‘அனகாப்பள்ளியில் உள்ள மாவட்ட விளையாட்டு ஆணையத்தில் (டிஎஸ்ஏ) அவுட்சோர்சிங் அடிப்படையில் ஜூடோ விளையாட்டு பயிற்சியாளராக சாமுவேல் ராஜ் பணிபுரிந்து வருகிறார். ஜூடோ நேஷனல் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக இரண்டு மைனர் ஜூடோ வீராங்கனைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார். வியாழக்கிழமை இரவு இணைப்பு ரயிலைப் பிடிப்பதற்காக விஜயவாடாவில் வீராங்கனைகளும், சாமுவேல் ராஜூம் நின்றிருந்தனர். அன்று ரயில் வராததால், இரு ஜூடோ வீராங்கனைகளையும், கண்டிகாவில் உள்ள தனியார் ஜூடோ அகாடமிக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது மது அருந்திருந்த சாமுவேல் ராஜ், இரண்டு ஜூடோ வீராங்கனைகளில் ஒருவரின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு தவறாக நடந்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனை, விஜயவாடாவில் உள்ள தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் புகார் செய்தனர். அதையடுத்து ஜூடோ அகாடமிக்கு விரைந்து ெசன்று, குற்றவாளி சாமுவேல் ராஜை கைது செய்தோம். அவர் மீது போக்சோ சட்டத்தின் 354 ஏ, 509 மற்றும் 12 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட வீராங்கனையும், மற்றொரு வீராங்கனையும் மீட்டு விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: