இதயத்தை திருடாதே கிரிஜா மீண்டும் நடிக்க வருகிறார்

பெங்களூரு: கடந்த 1989 மே 10ம் ேததி மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான தெலுங்கு படம், ‘கீதாஞ்சலி’. இது மணிரத்னம் தெலுங்கில் இயக்கிய முதல் படம். தமிழில் ‘இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் டப்பிங் செய்து, அதே தேதியில் திரைக்கு கொண்டு வரப்பட்டது. பி.சி.ஸ்ரீ ராம் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்திருந்தார். மனதை உருக்கும் காதல் கதை கொண்ட படமான இது மிகப்பெரிய வெற்றிபெற்றது. அனைத்துப் பாடல்களும் ஹிட்டானது. தேசிய விருதையும், நந்தி விருதுகளையும் பெற்ற இப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிஜா. தற்போது அவருக்கு 53 வயதாகிறது. அவரது தந்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இப்படத்துக்குப் பிறகு மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ‘வந்தனம்’ படத்தில் நடித்த கிரிஜா, இந்தியில் கடந்த 2003ல் திரைக்கு வந்த ‘துஜே மேரி கஸம்’ என்ற படத்தில் நடித்துவிட்டு, லண்டன் சென்று செட்டிலானார். இந்நிலையில், பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் நடிக்க வருகிறார். கன்னட நடிகரும், இயக்குனருமான ரக்‌ஷித் ஷெட்டி தயாரிப்பில் சந்திரஜித் இயக்கும் ‘இப்பனி தப்பித இலேயல்லி’ என்ற கன்னடப் படத்தில் கிரிஜா நடிக்கிறார். இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியாகிறது.

Related Stories: