ராகுல் விமானத்துக்கு மறுப்பு உ.பி. காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப் பதிவு

வாரணாசி: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடந்த பிப்ரவரி 14ம்தேதி வயநாட்டில் இருந்து வாரணாசி செல்ல இருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் விமானத்தை வாரணாசியில் தரையிறங்க கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், டெல்லி திரும்பி சென்றதாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு விமான நிலைய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.  இந்த விவகாரத்தில் பொய்யான தகவலை கூறியதாக அஜய் ராய் மீது போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.   புல்பூர் காவல்நிலையத்தில் அஜய் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

Related Stories: