இந்தியாவில் ஆடுவது எப்போதும் சவாலானது: கவாஜா சொல்கிறார்

புதுடெல்லி: ஆஸ்திரேலியா தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் நேற்று 81 ரன் அடித்தார். ஆட்டம் முடிந்த பின்னர் அவர் கூறியதாவது: இந்தியாவில் ஆடுவது எப்போதும் சவாலானது. அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்ற தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது அது எப்போதும் சவாலானது. நான் எப்போதும் ரன்களை அடிக்க விரும்பினேன். எனக்கு வழக்கமான ஸ்வீப் ஷாட் அடிப்பது பிடிக்கும். மிட்ஆப் திசையில் அடிப்பது எப்போதும் ஆபத்தானது. பீட்டர் அழகாக பேட்டிங் செய்தார். இந்தியா பேட்டிங்கை முடிக்கும் வரை இது ஒரு நல்ல ஸ்கோரா என தெரியாது, என்றார்.

வார்னரிடம் ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளதா, இந்திய பந்துவீச்சாளர்களிடம் சிக்கிக்கொண்டாரா என்று கேட்டபோது, ​ நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடைசி கேமில் அவர் எல்பிடபிள்யூ அவுட் ஆவதற்கு முன் அஷ்வின் பந்தில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். அவர் கொஞ்சம் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். சில நேரங்களில் அது எடுபடாமல் போகலாம். இந்த மூன்று இன்னிங்ைச வைத்து குறைகூற முடியாது. இந்த டெஸ்ட் தொடரில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எதுவும் நடக்கலாம். வார்னர் இவ்வளவு காலமாக ஒரு பயங்கர வீரராக இருந்தார். அவர் சற்று சோர்வாக இருக்கிறார், என்றார்.

Related Stories: