சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 8 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 8 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2023 முதல் 18.02.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 19 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 16 குற்றவாளிகள்,  சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 1 குற்றவாளி,  கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 9 குற்றவாளிகள் என மொத்தம்  45  குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் கடந்த 11.02.2023 முதல் 17.02.2023 வரையிலான ஒரு வாரத்தில் 08 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.குற்றவாளி 1.பிரசாந்த், வ/30, த/பெ.குப்புராஜ், எண்.66, 3வது தெரு, பல்லவன் நகர், புது வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவர் கடந்த 26.01.2023 அன்று செல்வகுமார், வ/34, த/பெ.வெற்றிவேலன், தண்டையார்பேட்டை, சென்னை என்பவரை கத்தியால் தாக்கி கொலைமுயற்சி செய்த வழக்கில் N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேலும் பிரசாந்த் N-4 காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 8 குற்ற வழக்குகள் உள்ளது. 2.அருண்ராஜ், வ/27, த/பெ.ஏழுமலை, வள்ளலார் நகர், ராமசந்திரபுரம், சூரைப்பூண்டி, கும்முடிப்பூண்டி என்பவர் கடந்த 24.01.2023 அன்று தினேஷ்குமார், வ/33, பச்சயப்பன், கொடுங்கையூர், சென்னை என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் பறித்த குற்றத்திற்காக P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். பிரசாந்த் மீது ஏற்கனவே 1 கொலை, 1 கொலைமுயற்சி, கஞ்சா உட்பட 9 குற்ற வழக்குகள் உள்ளது.

3.திருநா (எ) திருநாவுக்கரசு, வ/26, த/பெ.பாபு, எண்.273, 7வது தெரு, தாஸ் நகர், கன்னிகாபுரம், சென்னை, 4.அஜித் (எ) சசிகுமார், வ/26, த/பெ.வெங்கடேசன், எண்.273, 7வது தெரு, தாஸ் நகர், கன்னிகாபுரம், சென்னை ஆகிய இருவர் உட்பட சுமார் 8 நபர்கள் சேர்ந்து கடந்த 06.01.2023 அன்று இரவு மனோ, வ/31, த/பெ.வெங்கடேசன், புளியந்தோப்பு, சென்னை என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி குற்றவாளிகள் பிரசாந்த், அருண்ராஜ், திருநா (எ) திருநாவுக்கரசு மற்றும் அஜித் (எ) சசிகுமார் ஆகிய 4 நபர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், மேற்படி 4 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 11.02.2023 அன்று உத்தரவிட்டார்.

அதன்பேரில் மேற்படி 4 குற்றவாளிகளும்  குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதேபோன்று 5.எலி (எ) கமலக்கண்ணன், வ/22, த/பெ.குமரேசன், எண்.3/7, கந்தன் தெரு, மேட்டுப்பாளையம், சென்னை என்பவர் மீது 9 குற்ற வழக்குகள் உள்ள நிலையில் மீண்டும் வழிப்பறி செய்த குற்றத்திற்காகவும், 6.ராஜு (எ) ஆரோக்யராஜு, வ/39, த/பெ.மகேந்திரன், எண்.2, எழில்நகர், என்பவர் 1 கொலை முயற்சி உட்பட 5 வழக்குகள் உள்ள நிலையில் மீண்டும் வழிப்பறி செய்த குற்றத்திற்காக P-2 ஓட்டேரி காவல் நிலையத்திலும் 7.கார்த்திக் (எ) எலி கார்த்திக், வ/27, த/பெ.முத்து, எண்.73, கிழக்கு நமச்சிவாயபுரம், சூளைமேடு, சென்னை என்பவர் F-5 சூளைமேடு காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார்.

இவர் மீது 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 12 வழக்குகள் உள்ள நிலையில் வழிப்பறி செய்த குற்றத்திற்காக F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேற்படி குற்றவாளிகள் எலி (எ) கமலக்கண்ணன், ராஜு (எ) ஆரோக்யராஜு, கார்த்திக் (எ) கார்த்திக் ஆகிய 3 நபர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், மேற்படி 3 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 15.02.2023 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி 3 குற்றவாளிகளும்  குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    

இதே போல, 8.இளங்கோ, வ/29, த/பெ.வாசுதேவன், செட்டியார் அகரம், காந்தி நகர், போரூர் என்பவர் மீது 1 கொலை, 1 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் உள்ள நிலையில் மீண்டும் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதற்காக, D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். மேற்படி குற்றவாளி இளங்கோவின் குற்றச் செயலை கட்டுப்படுத்துவதற்காக, இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், மேற்படி குற்றவாளி இளங்கோவை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று (17.02.2023) அன்று உத்தரவிட்டார்.

அதன்பேரில் மேற்படி குற்றவாளி இளங்கோ  குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பூக்கடை, அடையார், தி.நகர், புனித தோமையர் மலை, கீழ்ப்பாக்கம் மற்றும் மைலாப்பூர் ஆகிய காவல் மாவட்டங்களில் தலா 1 குற்றவாளி என மொத்தம் 06 குற்றவாளிகள் கடந்த 11.02.2023 முதல் 17.02.2023 வரையிலான ஒரு வாரத்தில் செயல்துறை நடுவராகிய சம்மந்தப்பட்ட துணை ஆணையாளர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை (Bound Down) விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: