மணலி மண்டல குழு கூட்டம் ரூ.20 கோடி மதிப்பு திட்ட பணிகளுக்கு தீர்மானம்

திருவொற்றியூர்: மணலி மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. செயற்பொறியாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மக்கள் நலத்திட்ட பணிகள் குறித்து மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது கவுன்சிலர்கள் காசிநாதன், ராஜேந்திரன், நந்தினி, தீர்த்தி, முல்லை ராஜேஷ்சேகர், ஸ்ரீதர், ஜெய்சங்கர் ஆகியோர் குப்பையை அகற்றுதல், புதிய சாலை அமைத்தல் மற்றும் குடிநீர், மின்சார வாரியம் போன்ற பல்வேறு பணிகள் குறித்த கோரிக்கைகளை முன் வைத்தனர். அதனை தொடர்ந்து, 20வது வார்டுக்கு உட்பட்ட மணலி ஏரி கரையை ரூ.13 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி நடைபாதை மற்றும் பூங்கா அமைத்தல், 22வது வார்டுக்கு உட்பட்ட சின்னசேக்காடு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட ரூ.20 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்காக 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Related Stories: