மயிலாடுதுறை அருகே கடற்கரையில் இறந்து ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமை

கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே கடற்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமை இறந்து கரை ஒதுங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு, கூழையார், கொட்டாய்மேடு, மடவாமேடு, திருமுல்லைவாசல் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் கடல் வாழ் உயிரினம் ஆலிவ் ரெட்லி ஆமை பொறிப்பகம் உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த ஆமை பொறிப்பகங்கள் உள்ளது. கடற்கரை பகுதியில் ஆமைகள் வந்து முட்டை இடுவதற்கு ஏற்றார் போல இயற்கையான சூழல் அமைந்துள்ளது.

இதனால் ஆமைகள் இப்பகுதியை தேர்வு செய்து டிசம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை கடலில் அரிய வகை உயிரினமான ஆலிவ் ரெட்லி ஆமை கடற்கரை பகுதிக்கு வந்து சவுக்கு மரங்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கடற்கரை மணல் பகுதியில் குழிகளைத் தோண்டி அங்கு முட்டை இட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் கொள்ளிடம் பகுதியில் கடலோர மணல் பரப்பில் ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. நேற்று கடல் கரையில் ஆமை ஒன்று இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. தகவறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ஆலிவர் ரெட்லி ஆமையை அப்புறப்படுத்தினர்.

Related Stories: