கடலோர காவல்படை கப்பலுக்கு ராணி வேலுநாச்சியார் பெயர் மக்களவையில் திமுக வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவையில்  திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பூஜ்ய நேரத்தின்போது ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியதில், ‘‘சிவகங்கையில் 1730-ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பிறந்த ராணி வேலுநாச்சியார் ஒரு ஆளுமை சின்னம். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்த முதல் இந்திய ராணி ஆவார். ராணி வேலு நாச்சியார் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து தனது ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்றார்.  அவருக்கு கடந்த 2008-ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிடப்பட்டது.

மேலும் ராணி வேலு நாச்சியாரின் வீரத்தை போற்றும் வகையில் அவரது உருவப்படம் பரவலாக பயணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவரது நிஜ வாழ்க்கைப்போராட்டம்  62 நாடகக் கலைஞர்களின் பங்கேற்போடு தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் தமிழ்நாடு முழுவதும் நாடகமாக நடத்தப்பட்டது.

இதையடுத்து தற்போது இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள், துணிச்சலான பெண்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. சில கப்பல்களுக்கு ராணி கிட்டூர் சென்னம்மா, ராணி லட்சுமி பாய் போன்ற துணிச்சலான பெண்களின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ஆனால் ராணி வேலு நாச்சியாரின் பெயர் இன்னும் வைக்கப்படவில்லை எனவே, ராணி வேலு நாச்சியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பெயரை கடலோர காவல் படையின் விரைவு ரோந்து கப்பலுக்கு சூட்ட வேண்டும்’’ என தெரிவித்தார்.

Related Stories: