102 வயது சாதனை பாட்டி மரணம்

சென்னை: தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்க  மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தின் முன்னாள் நலவாரிய  உறுப்பினருமான டாக்டர் ஆவின் கி.கோபிநாத்தின் பாட்டி ஏ.ருக்மணி அம்மாள் (102). இவர், உடல் நல குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.‌ அவரது இறுதி சடங்கு காஞ்சிபுரத்தில் நடந்தது. ருக்மணிக்கு அச்சுதன் என்ற மகனும், ஜெயலட்சுமி, கோதைநாயகி, அமிர்த கௌரி, புனிதவதி, சீதாலட்சுமி என்கின்ற 5 மகள்களும்  உள்ளனர். ருக்மணி, சமூக சீர்த்திருத்த சிந்தனையாளர். பெண் கல்வியின் முக்கியத்துவம், மருமகளுக்கு அறிவுரை, தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, சுத்தம் சுகாதாரம் பேணி காத்தல், வரதட்சணை ஒழிப்பு, குழந்தை தாலாட்டு, கும்மி பாட்டு போன்ற பாடல்களை இட்டுகட்டி பாடியுள்ளார்.இவரது சிறப்பான சமூகப் பணியினைப் பாராட்டி,கடந்த 2015ம் வருடம் , சமூக சீர்த்திருத்த சிந்தனையாளர் மற்றும் சாதனையாளர் விருதினை சர்வதேச முதியோர் தினத்தன்று அரசு வழங்கியது. மேலும் பன்னாட்டு அரிமா சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்தது. பாட்டுப் பாட்டி என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவரது கணவர் ஆனந்தப்பிள்ளை 2006ம் ஆண்டு காலமானார். …

The post 102 வயது சாதனை பாட்டி மரணம் appeared first on Dinakaran.

Related Stories: