மாணவிகளை பலாத்காரம் செய்த மதரசா ஆசிரியருக்கு 169 வருடம் சிறை

திருவனந்தபுரம்: கோட்டயம்  அருகே மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவத்தில் மதரசா ஆசிரியருக்கு 169 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.6.4 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் யூசுப் (72). கோட்டயம் அருகே உள்ள கடுத்துருத்தியில் ஒரு அரபி பாடசாலையில் (மதரசா) ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2019ம் ஆண்டு மதரசாவுக்கு வரும் மாணவிகளை பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக தலையோலப்பரம்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் யூசுப் மாணவிகளை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இவர் மீது போக்சோ பிரிவில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு கடுத்துருத்தி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது 6 வழக்குகளில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் சாட்சிகள் ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மற்ற 5 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அனைத்து வழக்குகளிலும் சேர்த்து யூசுப்புக்கு மொத்தம் 169 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.6.4 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் யூசுப் 10 வருடம் சிறையில் இருக்கவேண்டி வரும்.

Related Stories: