திருப்பதி மாவட்டத்தில் மார்ச் 13ம் தேதி ஆசிரியர் மற்றும் பட்டதாரி எம்எல்சி தேர்தல்-கலெக்டர் தகவல்

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் மார்ச் 13ம் தேதி ஆசிரியர் மற்றும் பட்டதாரி எம்எல்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக கலெக்டர் வெங்கடரமணா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஆசிரியர் மற்றும் பட்டதாரி எம்எல்சி  தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலியில் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார். இதில், திருப்பதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் வெங்கடரமணா, மாநகராட்சி ஆணையாளர் அனுபமா அஞ்சலி, டிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, கலெக்டர் பேசியதாவது:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஏற்பாடுகள் செய்யப்படும். வருகிற 16ம் தேதி ஆசிரியர் மற்றும் பட்டதாரி பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். 27ம் தேதி வேட்புமனு வாபஸ் செய்யப்படும். மார்ச் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். திருப்பதி மாவட்டத்தில் இன்று(நேற்று) முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வரும்.

டிசம்பர் 30ம் தேதி வரையிலான வாக்காளர்களின் இறுதி பட்டியலின்படி ஆசிரியர் தொகுதியில் 5,882 வாக்காளர்களும், 38 வாக்குச்சாவடி மையங்களும், 86,906 பட்டதாரி  வாக்காளர்களும், 62 வாக்குச்சாவடி மையங்களும், 37 துணை வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. கோரிக்கைகளை பரிசீலனை செய்வது தொடர்பாக 168 ஆசிரியர்களும், 1,214 பட்டதாரிகளும்  வாக்குப்பதிவு மேலாண்மை, வாக்கு எண்ணும் பயிற்சி அளிக்கப்படும்.  போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். வாக்குப்பதிவு மையங்களில் இணையதள ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்படும். தேவையான ஓட்டுப்பெட்டிகள் உள்ளது. வருவாய்த்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்களை கொண்டு தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Related Stories: