மார்ச் 12வரை கியூட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் 2023ம் ஆண்டு இளங்கலை பிரிவில் சேருவதற்கான கியூட் நுழைவு தேர்வு மே 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுகின்றது. இதற்கான விண்ணப்பபதிவு நேற்று இரவு தொடங்கியது. இது குறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், ‘‘கியூட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு வியாழன் இரவு (நேற்று) முதல் தொடங்குகின்றது. விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு மார்ச் 12ம் தேதி கடைசி நாளாகும். தேர்வு நடைபெறும் இடங்களின் பட்டியல் ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்படும். மே இரண்டாவது வாரத்தில் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்றார்.

Related Stories: