வாஷிங்டன்: உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா வால்ட் டிஸ்னி. பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா உள்ளது. வால்ட் டிஸ்னியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, கொரோனா காலத்தில் 2020ம் ஆண்டு வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
