பாட்னா, இமாச்சல், கவுகாத்தி, திரிபுரா 4 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை

புதுடெல்லி: பாட்னா, இமாச்சல், கவுகாத்தி, திரிபுராவில் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பிப்.7ம் தேதி கூடியது. அப்போது பல்வேறு பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரனை பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கும்படியும், பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் சபினாவை இமாச்சல் உயர்நீதிமன்ற நிரந்தர தலைமை நீதிபதியாக நியமிக்கும்படியும் கொலிஜியத்தில் உள்ள 3 உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நீதிபதி சபீனா ஏப்.19ம் தேதி ஓய்வு பெற உள்ளார். மேலும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான அபரேஷ்குமார் சிங்கை திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நீதிபதி சந்தீப் மெக்தாவை கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கும்படியும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.   

ஏற்கனவே நீதிபதி கே. வினோத் சந்திரனை கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலிஜியம் முன்பு பரிந்துரை செய்து இருந்தது. தற்போது உள்ள காலியிடம் நிலவரப்படி பாட்னாவுக்கு அவரை பரிந்துரை செய்துள்ளது.

Related Stories: