ஜனாதிபதி முர்மு பிப்.18ல் மதுரை வருகை

மதுரை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். மகா சிவராத்திரி விழா வரும் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை ஈசா மையத்தில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர், 18ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம், மதுரை விமான நிலையம் வருகிறார். மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அன்று பிற்பகல் மதுரை விமான நிலையத்தில் இருந்து  கோவை ஈசா மையத்திற்கு விமானத்தில் செல்கிறார்.

Related Stories: