போதையில் தகராறு: நண்பனுக்கு கத்திக்குத்து

தாம்பரம்: தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் ஆதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை இருவர் குடிபோதையில் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஆத்திரமடைந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மற்ெறாருவரை குத்தி விட்டு தப்பி ஓடினார். இதை பார்த்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், கத்தியால் குத்தப்பட்டவர் ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜன் (25), மற்றொருவர் நண்பர் வினோத்குமார் (32) என்பதும், போதையில் வினோத்குமார், ராஜனை கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. கொலை வழக்கு மற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் வினோத்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான வினோத்குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: