மேகாலயா சட்டசபை தேர்தல்: 60 சிட்டிங் எம்எல்ஏ உட்பட 379 பேர் வேட்புமனு தாக்கல்

ஷில்லாங்: மேகாலயா மாநில சட்டசபைக்கு 37 பெண்கள் உட்பட மொத்தம் 379 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் நாகாலாந்து சட்டப்பேரவைக்கு 225 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலயா மாநில சட்டசபைக்கு வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படும். இந்தத் தேர்தலில் 37 பெண்கள் உட்பட மொத்தம் 379 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா, சபாநாயகர் மெட்பா லிங்டோ, எதிர்க்கட்சித் தலைவர் முகுல் சங்மா உள்ளிட்ட 60 சிட்டிங் எம்எல்ஏக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் வரும் 10ம் தேதியாகும். அதேபோல் 60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில்,  மொத்தம் 225 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: