ஒட்டன்சத்திரம் அருகே தோட்டத்தில் பயங்கர தீ பல லட்சம் மதிப்புள்ள கரும்பு, தென்னை நாசம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே தோட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கரும்பு, தென்னை எரிந்து நாசமடைந்தன.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியை சேர்ந்தவர் ரவி பாரதி (58). விவசாயி. இவர் பெருமாள் கோயில் பகுதியில் தனது 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்புகள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.

நேற்று முன்தினம் பலத்த காற்று காரணமாக மின்வயர் உரசியதில் கரும்பு தோட்டம் மட்டுமின்றி அருகிலிருந்த தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து நேற்று ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சேதமடைந்த பயிர்களை வேளாண்மை துறை அலுவலரிடம் ஆய்வு நடத்த கூறுவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து விவசாயி ரவிபாரதி கூறுகையில், ‘‘5 ஏக்கர் நிலத்தில் சுமார் 250 டன் கரும்பு விளைச்சல் இருந்தது. மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கரும்பு தோட்டம் மற்றும் தென்னை மரங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது’’ என்றார்.

Related Stories: