கடலில் தங்கத்தை போட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்: காவல்துறையினர் விசாரணை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து தங்கம் ஒரு நாட்டுப்படகில் இருந்து கடத்தி வருவதாக மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படையினர்க்கு தகாவில் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கடலோர காவல்படை அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபடும் பொழுது இலங்கையில் இருந்து நாட்டுப்படகுகளில் வந்த வீரர்கள் தென்கடல் பகுதிகளில் இருந்து கடலோர காவல்படை வீரர்களை பார்த்தவுடன் தங்கத்தை கடலில் வீசி விட்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் கடலோர காவல்படை அதிகாரிகள் அந்த படகை சுற்றி வளைத்து படகுகளில் ஏறி சென்ற பொது தங்கம் போன்ற கடத்தல் பொருட்கள் எதுவும் இல்லை என்று தெரிந்த பின் இதனை தொடர்ந்து கடலோர காவல்படை வீரர்களை பார்த்தவுடன் கடலில் போடப்பட்ட தங்கமாக இருக்கும் என்ற கோணத்தில் தற்போது கடலோர காவல்படையினர் வீசப்பட்ட கடலில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதுவரை எந்தவித தங்கம் கடலில் வீசப்பட்டதா என எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. மேலும் இலங்கையில் இருந்து தங்கம் கடத்திவந்ததாக ஒரு ரகசிய தகவல் கடலோர காவல்படையினர்க்கு கிடைத்துள்ளது, இதன் அடிப்படையில் தான் தற்பொழுது மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படையினர் அதிகாரிகள் அந்த நாட்டுப்படகை தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து மிக அருகாமையில் இலங்கை இருப்பதால் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதன் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் தற்போது கடலோர காவல்படை அதிகாரிகள் தங்கத்தை கடலில் வீசப்பட்ட சம்பவம் மண்டபம் பகுதியில் உள்ள மக்கள் இடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories: