ரூ.4 ஆயிரம் லஞ்சம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் கைது

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த சந்திரசேகர் (48) என்பவர் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர், இளநிலை உதவியாளராக பணியாற்றும் வரும் தனபால் என்பவர் மூலம் சாலை பணியாளரான குப்புசாமிக்கு அரியர்ஸ் தொகை வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து, குப்புசாமி, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய வழங்கிய ரூ.4 ஆயிரத்தை தனபாலிடம் குப்புசாமி கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனபாலை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்திரசேகரையும் போலீசார் கைது செய்தனர். 

Related Stories: