குஜராத் பெண்ணை 2 நாள் காப்பகத்தில் வைக்க உத்தரவு

மதுரை: தென்காசி மாவட்டம் இலஞ்சி கிராமத்தில் இளம்பெண் குருத்திகா கடத்தப்பட்ட விவகாரம் குறித்து குருத்திகாவை 2 நாள் காப்பகத்தில் வைத்து ரகசிய வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.   

காதல் திருமணம் செய்த குஜராத் பெண் கடத்தப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட பெண்ணை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளையானது உத்தரவு அளித்துள்ளது. அதுபோக சம்மந்தப்பட்ட பெண்ணிடம் வழக்கு குறித்து காவல்துறையினர் முழு விசாரணை நடத்தி ராசசிய வாக்குமூலம் செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட பெண்ணிடம் அவர்களது பெற்றோர், உறவினர்கள் யாரும் சந்திக்க கூடாது என கூறியுள்ளனர். வழக்கறிஞர்கள், காவல்துறையினர் முதற்கொண்டு யாருமே சந்திக்கக்கூடாது,என்றும் கூறியுள்ளனர். விசாரணைக்கு தொந்தரவு கொடுக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் இந்த பெண்ணிற்கும் குஜராத்தை சேர்ந்த நபருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்ததாக பெண்வீட்டார் தரப்பில் கூறுகின்றனர். அதற்கு திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் புகைப்பட ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறத எனவும் கேள்வி எழுப்பிருக்கிறார்கள். திருமணம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டபிறகு இதனை தொடர்ந்து நீதிபதிகள் சமமந்தப்பட்ட பெண்ணை 2 நாட்கள் காப்பகத்தில் வைக்க உத்தரவு பிறப்பித்து இருக்கின்றனர்.

சம்மந்தப்பட்ட தென்காசி காவல்துறையினர் சம்மந்தம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் மேலும் அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பதிவுசெய்யவேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட பெண்ணை அவர்களது குடும்ப உறுப்பினரோ அல்லது உறவினர்களோ யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என தெரிவித்த நீதிபதிகள் எந்தவிதமான அச்சுறுத்தலும் கொடுக்கக்கூடாது என எச்சரித்திருக்கிறார்கள்.

மேலும் விசாரணைக்காக அறிக்கை வரும் 13ம் தேதி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு அந்த வழக்கினை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.     

Related Stories: