நிலநடுக்கத்தில் பிளந்த விமான ஓடுதளம்: மக்கள் பரபரப்பு

அங்காரா: துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஒரே ஓடுபாதையில் பிரம்மாண்டமாக பிளவு ஏற்பட்டுள்ளது. துருக்கியின் தென் மத்திய பகுதியில் கடந்த 6ம் தேதி அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.8 வரை பதிவான இந்த நிலநடுக்கங்களில் இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்துள்ளனர்.

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். இடிந்து விழுந்த கட்டிடங்களில் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை 210 ஆயிரத்தை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஒரே ஓடுபாதையில் பிரம்மாண்டமாக பிளவு ஏற்பட்டுள்ளது. விமான ஓடுபாதை இரண்டாகப் பிளந்து கிடப்பதால் அதனைப் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இதனால் அந்த விமான நிலையமே இயங்கமால் முடங்கியுள்ளது.

Related Stories: