சேதமடைந்த பயிர் ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் அறிவிப்பு தமிழக முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

வேதாரண்யம் : மழையால் சேதமடைந்த சம்பா பயிர் ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் அறிவித்த தமிழக முதல்வருக்கு விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மழையல் 25ஆயிரம் ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து உள்ளது. வயல்களில் தேங்கிய மழை நீரை இன்ஜின் மூலம் இறைத்து வருகின்றனர்.

தற்போது ஆட்களை வைத்தும், இயந்திரத்தின் மூலமும் தண்ணீரில் அறுவடை பணி நடந்து வருகிறது.விளைந்த நெல்லில் மிகுந்த சேதம் அடைந்த நிலையில் சொற்ப நெல்லையாவது காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு கட்டங்களாக போராடி வருகின்றனர்.வேதாரண்யம் பகுதியில் ஆதனூர், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், தகட்டூர், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து நெல்மணிகள் முளைக்க துவங்கிவிட்டன.

நேற்று முன்தினம் வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.இந்நிலையில், தமிழக முதல்வர் ஹெக்டருக்கு ரூ.20,000 நிவாரணம் அறிவித்துள்ளார். இப்பகுதி விவசாயிகளின் நிலைமை அறிந்து ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வருக்கு இப்பகுதி விவசாயிகள், காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு விவசாயி பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், ஆத்மா குழு உறுப்பினர்கள் உதயம் முருகையன், மகா குமார் மற்றும் விவசாய சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: