வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை நாடும் பொதுமக்கள்: தரமற்ற குளிர்பானத்தால் உடல்பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!!

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலால் மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் திருவண்ணாமலையில் குளிர்பான கடைகளை மக்கள் அதிகம் நாடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கோடை வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள நுங்கு, தர்பூசணி, கூல், பழச்சாறு உள்ளிட்ட குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர். மக்கள் அதிக அளவில் குளிர்பான கடைகளுக்கு வருவதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சென்னையில் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன.

இதனால் சாலைகளில் கனல் நீர் ஏற்படுகிறது. கடும் வெப்பத்தில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். கடும் வெயிலால் குளிர்பான கடைகளை நாடும்போது தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தரமற்ற குளிர்பானங்களை வாங்கி அருந்த வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இயற்கையாக உள்ள தர்பூசணி, கிர்ணி பழம், கரும்பு சாறு போன்றவை அருந்தினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை நாடும் பொதுமக்கள்: தரமற்ற குளிர்பானத்தால் உடல்பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: