குன்னூரில் காய்த்த 2 கிலோ ராட்சத எலுமிச்சை

குன்னூர் : குன்னூரில் 2 கிலோ எடையுள்ள எலுமிச்சை பழம் காய்ந்துள்ளது. இதனை பொதுமக்கள் அதிசமாக பார்த்து செல்கிறார்கள்.  நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள உஷா பிராங்கிளின் என்பவரது வீட்டில் 2 கிலோ எடையுள்ள ராட்சத எலுமிச்சை காய்த்துள்ளது. பெரும்பாலும் இந்த கனிகள் 50 கிராமில் இருந்து 100 கிராம் மட்டுமே காய்க்கும். 2 கிலோ எடை எலுமிச்சையை இந்த பகுதி மக்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து போட்டோ எடுத்துச்செல்கின்றனர்.  

இது நார்த்தங்கா வகையை சார்ந்ததா? அல்லது எலுமிச்சை வகையா? என தெரிந்து கொள்ள தோட்டக்கலைத்துறையினரிடம் இதன் உரிமையாளர்கள் ஒப்படைக்க உள்ளனர்.

Related Stories: