வீரபத்திரசாமி கோயில் விழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

போச்சம்பள்ளி : காவேரிப்பட்டணம் அருகே வீரபத்திரசாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், சுண்டகாப்பட்டி கிராமத்தில் வீரபத்திரசாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து கரகம் அலங்கரித்து, வீரபத்திரசாமி சக்தி அழைத்து, சேவை ஆட்டம் நடந்தது.

வாள், சாட்டையுடன், மக்கள் பாரம்பரிய நடனமாடி வந்தனர். தொடர்ந்து அருள் வந்த ஆண்களும், பெண்களும் தரையில் அமரச்செய்து, அவர்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். மதியம் வீரபத்திரர், குட்டியப்பன், ஜடை சென்றாயன், ஒசராயன், மாசியம்மாள் மற்றும் கரகம் தலை கூடுதல், வீரபத்திர சாமியுடன் அனைத்து சாமிகளும் ஆலயம் சென்றடைதல் மற்றும் ஆலயத்தில் குழந்தைகளுக்கு தலைமுடி நீக்கி பெயர் வைத்தல் நடந்தது.

மாலை காலஞ்சென்ற பெரியோர்களை நினைத்து ஆலயத்தில் நிலை நிறுத்துதல் மற்றும் சித்தப்பா சுவாமியின் சன்னதியில் அலங்காரித்து பூஜை செய்யப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: