வில்லியனூர் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 6 பேர் கைது

வில்லியனூர் : வில்லியனூர்  காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க  போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி வில்லியனூர் அரசு கண்ணகி பெண்கள் பள்ளி அருகே சிலர் சிறுவர்களுக்கு கஞ்சா  விற்பனை செய்வதாக வில்லியனூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை ரகசிய தகவல் கிடைத்து.  அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேலய்யன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு,  கிரைம் போலீஸ் எழில் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.  

அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் கஞ்சா  வாங்கியவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.  இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தபோது,  அவர்களிடம் 15 பாக்கெட்டுகள் கொண்ட 337 கிராம் கஞ்சா இருந்தது  தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை காவல்நிலையம்  அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், கள்ளக்குறிச்சி  மணியார்பாளையம் பகுதியை சேர்ந்த சென்னப்பன்(35), வில்லியனூர்  சுல்தான்பேட்டை முகமது இர்பான்(18), சேலம் பெத்தநாயக்கன்பாளையம் அரவிந்த்(22), சசிகுமார்(23), ரெட்டியார்ப்பாளையம் அவினாஷ்(20) மற்றும் ஒரு  சிறுவன் என்பது தெரியவந்தது. பிறகு அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து 5 பேரை  காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை அரியாங்குப்பம் சிறுவர்  சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Related Stories: