எடப்பாடி அணி வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவாக பிரசாரம் செய்வாரா?..முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எடப்பாடி அணி வேட்பாளருக்கு ஆதரவாக ஓ.பி.எஸ். பிரசாரம் செய்வாரா என்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில், மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்குக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்று அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில் வருமாறு: பாஜ இதுவரை தனது அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லையே?

அதிமுக தலைமையிலான கூட்டணியிலே பாஜ உள்ளது. 7ம் தேதி கடைசி நாள். அதற்குள் அவர்களுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள். ஓபிஎஸ் இரட்டை இலையை ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளாரே? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தான், அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் இன்றைக்கு அதிமுக எல்லோருக்கும் அந்த கடிதங்களை முறையாக அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்றவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு நான் அளிக்கும் அட்வைஸ். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு பிரசாரம் மேற்கொண்டால் ஏற்றுக்கொள்வீர்களா? 7ம் தேதி கடைசி நாள். அதற்குப் பிறகு நீங்கள் கேட்கும் விஷயங்கள் குறித்து முடிவு செய்ய வேண்டியது கட்சி. நான் கிடையாது.

இரு அணிகள் இணையவேண்டும் என்றும் அவர்களுடைய உட்கட்சி விஷயங்களில் நாங்கள் தலையிடுவது இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளாரே? உட்கட்சி விவகாரங்களில் அவர்கள் என்றைக்கும் தலையிடுவதில்லை. ஆனால் தோழமை, நட்பு, கூட்டணி என்ற அடிப்படையிலே கருத்துக்களைச் சொல்லாம். கருத்து என்பது வேறு. தலையீடு என்பது வேறு. கருத்துக்களை தெரிவிக்கலாம். அந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் எங்கள் கட்சியின் விருப்பம். பாஜ கருத்தை ஆதரிக்கிறீர்களா. பரிசீலனையில் எடுத்துக்கொள்வீர்களா? அதனை எல்லாம் தாண்டி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்துள்ளது. இப்போதைக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்துகிறோம். அதுதான் இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Stories: