புதுவையில் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் ஊழல்: நாராயணசாமி பரபரப்பு பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஒன்றிய, மாநில அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி: நாம் எப்படி தொலைபேசி, செல்போனுக்கு பணத்தை செலுத்திவிட்டு பேசுகிறோமோ, அதேபோல் புதுவையில் மின் கட்டணத்தை முன்கூட்டிய செலுத்த வேண்டும் என்கிறார்கள். இதனால் ஏழை தொழிலாளர்கள், விவசாயிகள் எப்படி முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட்டு மின்சாரத்தை பெற முடியும். இதுபோன்ற திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது.

இந்த திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கிறார்கள். அடுத்ததாக ரூ.250 கோடி வாங்கி பிரீபெய்டு மின் மீட்டரை இவர்கள் பொறுத்திவிட்டு, மின்துறையை தனியாரிடம் தாரை வார்க்க இந்த வேலை நடக்கிறது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுசம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: