ஹேசல்வுட் காயம் ஆஸி.க்கு பின்னடைவு

பெங்களூருவில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் இடது காலில் காயம் அடைந்ததை அடுத்து, நாக்பூரில் நடக்க உள்ள முதல் டெஸ்டில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து டெல்லியில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியிலும் கூட ஹேசல்வுட் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், ஸ்டார்க், கிரீன் என மூன்று பேர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, ஆஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. நாக்பூர் டெஸ்டில் ஹேசல்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: