சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் பங்கேற்றுள்ளனர். ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் பன்னீர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.தென்னரசுவை அதிமுக வேட்பாளராக நிறுத்த ஒப்புதல் கேட்டு அவைத் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளதாக ஜெயக்குமார் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: