திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆறுபடை வீடுகளின் ஒன்றான ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலையில் நான்கு மணிக்கு மூலவர் முருகப்பெருமானுக்கு பால் பழம் பஞ்சாமிர்தம் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் தங்கவேல் வைர ஆபரணங்கள் அலங்காரம் செய்யப்பட்டது.

 விழாவையொட்டி ஆந்திரா கர்நாடகா தமிழகத்திலிருந்து சென்னை காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானுக்கு மாலை அணிவித்தும் விரதம் இருந்தும் காவடி எடுத்து வந்து  வழிபட்டு செல்கின்றனர்.

விழாவை ஒட்டி காவல்துறை கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மாலையில் உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோயில் மாட வீதியில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

Related Stories: