பொது வேட்பாளர் யார் என இதுவரை எடப்பாடி தரப்பு தெரிவிக்கவில்லை: ஓபிஎஸ் அணி குற்றச்சாட்டு

சென்னை: பொது வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு, எடப்பாடி தரப்பில் இருந்து எங்களுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். சென்னையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இந்த பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட மாட்டோம்.  உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம். அதிமுக சார்பில், இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் ஆதரிப்போம்.

இதில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி என்ற பேச்சுக்கு இடமில்லை. உச்ச நீதிமன்றம், எங்களின் கருத்தையும் கேட்க சொல்லி உள்ளது. ஆனால், பொது வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு, இதுவரை எங்களுக்கு வரவில்லை. அதுபற்றி அவர்கள் எங்களிடம் ஆலோசிக்கவும் இல்லை. அதேநேரம், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீதிமன்ற தீர்ப்பை ஆதரிக்கவும் செய்யலாம், எதிர்க்கவும் செய்யலாம். எங்களை பொறுத்தவரை நாங்கள் என்னென்ன கோரிக்கை வைத்தோமோ அதை நீதிமன்றம் நிறைவேற்றியுள்ளதால் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: