புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசின் அனைத்து சலுகைகள், சேவைகள் பெற ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனாளிகள் தங்கள் உரிமைகளை நேரடியாக பெற முடிகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இத்துடன் வங்கி அல்லது தபால் வங்கி புத்தகம், பான் கார்டு, பாஸ்போர்ட், ரேசன் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

Related Stories: