வெள்ளை சேலை அணிந்து மனு செய்ய வந்த சுயேச்சை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று இந்திய குடியரசு கட்சி பன்னீர்செல்வம், ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி வின்சென்ட், விஸ்வ பாரத் மக்கள் கட்சி வேலுமணி மற்றும் சுயேட்சைகள் என 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதன்மூலம், இதுவரை 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க பொதுச்செயலாளர் ஆறுமுகம், வெள்ளை சேலையை அணிந்து விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

போலீசார், அவரை தடுத்து நிறுத்தி முறையாக செல்லும் படி தெரிவித்தனர். அதன்பின் அவர் வெள்ளை நிற உடை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.  அவர்  கூறுகையில்,``நான் எம்.எல்.ஏ.வானால் மதுவால் கணவனை இழந்த பெண்களுக்கு விதவை சான்றிதழ் வழங்கிடவும், குடிபோதை மறுவாழ்வு மையங்கள் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் திறக்க குரல் கொடுப்பேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  விதவைகளுக்காக குரல் கொடுக்க தயார் என்றால் மனுவை வாபஸ் பெறுவேன்’’ என்றார். இன்று விடுமுறை, நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது.

Related Stories: