வந்தே பாரத் வெர்ஷன் 2 வந்தே மெட்ரோ அறிமுகம்: அமைச்சர் தகவல்

ஐதராபாத்:  வந்தே பாரத் ரயிலை போன்று, விரைவில் வந்தே மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “வந்தே பாரத் ரயிலின் வெற்றியை தொடர்ந்து, குறைவான தூரத்தில் உள்ள இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில்களை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த 16 மாதங்களுக்குள் வந்தே மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும். தலா 100 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள இரண்டு நகரங்களுக்கு இடையே அதிவேகத்தில் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ரயில்வே தனியார் மயமாக்கப்படும் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை. ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

Related Stories: