கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளரின் நண்பர் உட்பட 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன்..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜனின் நண்பர் கர்சன் செல்வம் உட்பட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்த கர்சன் செல்வம் உட்பட 3 பேரும் பிப்ரவரி 7ல் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருக்கிறது. கோவையில் உள்ள விசாரணை அலுவலகத்தில் பிப்ரவரி 7ம் தேதி காலை 10 மணிக்கு 3 பேரும் ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: