அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

சென்னை: அண்ணா நினைவுநாளையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி நேற்று காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து

கொண்டனர். இதை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ ஜெ.சி.டி.பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: