கடும் நெருக்கடிகளை தருகிறது ஐஎம்எப் மீது பாக். பிரதமர் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் உலக நாடுகளின் உதவியை கோரியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமும்(ஐ.எம்.எப்) கடன் கேட்டுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நிதியமைச்சருடன் நடத்திய இஷாக் டார் மற்றும் குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது மின்கட்டணத்தை உயர்த்தவும், வரியை அதிகரிக்கவும் சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியது. இதனால் அங்கு எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்தது.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “பாகிஸ்தானுக்கு கடன் தர ஐ.எம்.எப் விதித்துள்ள நிபந்தனைகள் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. என்றாலும் வேறு வழியின்றி நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: