எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு

வாஷிங்டன்: எச்1 பி விசா மனுக்களுக்கான குறைந்த வரம்பு காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 85ஆயிரம் பேருக்கு மட்டுமே எச்1பி விசா வழங்கப்படுகின்றது. இதில் 20ஆயிரம். அமெரிக்க நிறுவனங்களில் முதுகலை பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. 65,000 விசாக்கள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்க கொள்கைகளுக்கான நேஷனல் பவுண்டேஷன் என்ற ஆராய்ச்சி அமைப்பானது எச்1பி விசா தொடர்பாக எச்1பி மனுக்கள் மற்றும் மறுப்பு விகிதம் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கையை வௌியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், குறைந்த வருடாந்திர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளால் எச்1பி விசாக்களுக்கு பெரும் எண்ணிக்கையில் பதிவு செய்யப்படவில்லை. இதனால், அமெரிக்காவிற்கு வெளியே வேலை மற்றும் ஆட்களை அனுப்புவதற்கு நிறுவனங்களை ஊக்குவிக்கின்றன. இதனால் திறமைவாய்ந்த பலர் தனது அமெரிக்கா வந்து பணியாற்ற முடியவில்லை. இது அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது\\” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: