இளம்பெண் துணியை இழுத்து மானபங்கம்: ரவுடி கைது

சென்னை: கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தை சேர்ந்தவர் நசீமா (39). இவர், கோடம்பாக்கம் பாரதிஸ்வரர் காலனியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த பெரும்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஐயப்பன் (32), மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் நசீமா, பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி ஐயப்பன், நசீமா துணியை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார். இதுகுறித்து நசீமா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சூப்பர் மார்க்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்திய போது, பெரும்பாக்கத்தை சேர்ந்த ரவுடி ஐயப்பன் மாமூல் கேட்டு நசீமாவின் ஆடையை பிடித்து இழுத்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ரவுடி ஐயப்பன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: